கொஞ்ச நாள் பிரேக் எடுத்துக்கிறேன்… திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன?

சிறிது நாட்களுக்கு எல்லாவற்றிலும் இருந்து பிரேக் எடுத்து கொள்கிறேன் என, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இயக்குநர், தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். இவரது ஜி ஸ்குவாட் தயாரிப்பில் , விஜய் குமார்  நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பைட் கிளப்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தன்னுடைய அனைத்து சமூக வலைதள பக்கங்களில் இருந்தும், ஒரு பிரேக் எடுத்து கொள்வதாக லோகேஷ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், வெளியிட்டுள்ள அறிக்கையில், ” என்னுடைய ஜி ஸ்குவாட் நிறுவன தயாரிப்பில், வெளியான பைட் கிளப் படத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்புக்கு மிகவும் நன்றி.

சிறிது காலத்துக்கு நான் அனைத்து சமூக வலைதள பக்கங்கள் மற்றும் என்னுடைய மொபைல் போன் ஆகியவற்றுக்கு பிரேக் அளிக்க போகிறேன். அடுத்த படத்தில் கவனம் செலுத்தவே இதை செய்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில்  யாரும் என்னை தொடர்பு கொள்ள முடியாது.

திரைத்துறையில் என்னுடைய ஆரம்ப காலம் தொட்டு ரசிகர்களாகிய நீங்கள் அளிக்கும் அன்பிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து கொள்கிறேன். நேர்மறை விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். எதிர்மறை விஷயங்கள் வேண்டாம்,” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

தென் இந்தியா பாரதத்தின் கலாச்சார கோட்டை: ராஜ்நாத் சிங் பெருமிதம்!

கவுதம் மேனன் குரலில் யோகி பாபுவின் ’BOAT’ டீசர்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts