மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து 5 மெகா ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு புதிய பாதையை உருவாக்கி கொண்டவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
கைதி, விக்ரம், லியோ படங்களை LCU (Lokesh Cinematic Universe) என்ற கான்செப்ட்டிற்குள் இணைத்து ஒரு புதிய டிரெண்டை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
லியோவை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க லோகேஷ் தயாராகி கொண்டிருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” 5 படங்களை இயக்கிய பிறகு, G Squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். முதற்கட்டமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களின் படங்களை தயாரிக்க உள்ளோம்.
Need all your love and support 🤗❤️@GSquadOffl pic.twitter.com/9NWou59tuE
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 27, 2023
கூடிய விரைவில் இதுபற்றிய அறிவிப்புகள் வெளியாகும். எனக்கு கொடுத்த ஆதரவை அவர்களுக்கும் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்,” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில் அவரின் தயாரிப்பு நிறுவன லோகோவை கவனித்த ரசிகர்கள், ‘தேள் கொடுக்கு சிங்கத்தை சீண்டாதப்பா’ என கேப்ஷன்கள் போட்டு, அவருக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
G Squad நிறுவனத்தின் லோகோ தேளின் கொடுக்கு போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் (சூர்யா) கதாபாத்திரத்தின் கழுத்தில் தேள் வடிவ டாட்டூ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-கார்த்திக் ராஜா
”இதயத்தை வென்ற என் ஓமனா”: ஜோதிகாவை பாராட்டிய சூர்யா
அதிமுக பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி ஆட்சேபனை மனு தாக்கல்!