Director Lingusamy Shares about Vijay

சண்டக்கோழி விஜய் நடிக்க வேண்டிய படம்: லிங்குசாமி

சினிமா

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் சண்டக்கோழி. இந்த படம் தான் தமிழ் சினிமாவில் விஷாலை ஒரு மாஸ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது.

இந்நிலையில் சண்டக்கோழி படத்தின் கதையை முதலில் நடிகர் விஜய்யிடம் தான் கூறினேன் என்று லிங்குசாமி கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் லிங்குசாமி கூறியதாவது, ”சண்டக்கோழி படத்தின் முதல் பாதி கதையை மட்டும் தான் விஜய் கேட்டார். ராஜ் கிரண் கதாபாத்திரத்தின் அறிமுக காட்சி இரண்டாம் பாதி கதையை அவர் கேட்கவில்லை. அதன் பிறகு விஷால் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

சண்டக்கோழி ரிலீஸுக்கு பின் ஒரு நிகழ்ச்சியில் விஜய்யை சந்திக்க நேர்ந்தது. அப்போது விஜய் அவர்களே என்னிடம் வந்து சண்டக்கோழி படம் சூப்பராக இருந்தது என்று பாராட்டினார். ஆனால் எனக்கு விஜய் இந்த படத்தில் நடிக்காததால் அவர் மீது ஒரு சின்ன கோபம் இருந்தது.

நீங்கள் தான் இரண்டாம் பாதி கதையைக் கேட்கவில்லையே விஜய் என்று நான் கூறினேன். அதற்கு விஜய் அவர்கள், இந்த படத்திற்கு விஷால் தான் சரியான பொருத்தம், விஷால் மாறி ஒரு ஹீரோ தமிழ் சினிமாவிற்கு தேவை என்று சொன்னார். விஜய்யின் வார்த்தைகளை கேட்டதும் அவர் மீது இருந்த கோபம் காணாமல் போனது” என்று லிங்குசாமி கூறினார்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி: ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

IPL2024: இந்த தமிழக வீரர் 10 கோடிக்கு மேல ஏலம் போவாரு… பிரபல வீரரின் கணிப்பு உண்மையாகுமா?

விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் ட்ரெய்லர் அப்டேட்!

ஆளுநரின் வெள்ள ஆய்வு: டெல்லியில் ஸ்டாலின் டென்ஷன் ரியாக்‌ஷன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0