இலங்கையைச் சேர்ந்த ஈழப் பின்னணி கொண்ட பத்திரிகையாளர் சோமிதரன். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது சோமிதரன் இயக்கத்தில் இலங்கைப் போரால் பாதிக்கப்பட்டவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் நீளிரா. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நவீன் சந்திரா, ரூபா கொடூவாயூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நீளிரா படத்தின் போஸ்டரை கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “ஈழப்போர் குறித்த இந்த திரைப்படம் நிச்சயமாக உங்கள் இதயத்தை தொடும்” என்று தெரிவித்துள்ளார். விரைவில் நீளிரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை: ராமதாஸ் வலியுறுத்தல்!
மணிப்பூரில் யாத்திரை தொடங்கியது ஏன்?: ராகுல்காந்தி விளக்கம்!