நயன்தாராவால் இயக்குநருக்கு சிக்கல்!

சினிமா

படப்பிடிப்புக்கு நயன்தாரா தேதி ஒதுக்காததால் தயாரிப்பாளரும், இயக்குநருமான சசிகாந்த் கவலையில் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.

2010ஆம் ஆண்டு வெளியான ’தமிழ்ப்படம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சசிகாந்த். ஒய் நாட் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் சசிகாந்த் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவாஜியின் மகன்.

தமிழ்படத்தை தொடர்ந்து இறுதிச்சுற்று, விக்ரம்வேதா அண்மையில் வெளியாகி தேசியவிருது பெற்ற மண்டேலா உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளது அந்நிறுவனம்.

தயாரிப்பாளராக இருக்கும் அவர் இயக்குநராகும் ஆவலில் மாதவன், சித்தார்த் ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டு, அந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதன்படி தொடங்கவில்லை.

காரணம், “நயன்தாரா இந்தப்படத்துக்குக் கொடுப்பதாகச் சொன்ன தேதிகளில் அட்லி இயக்கும் ஜவான் படப்பிடிப்பிற்கு மும்பை போய்விட்டார் எப்போது இந்தப்படத்துக்கு வருவார் என்றும் சரியாகச் சொல்லவில்லை.

பலமுறை பேசிய பின் நயன்தாராவின் தேதிகள் உத்தேசமாகச் சொல்லப்பட்டது. ஆனால் அந்தத் தேதிகளில் மாதவன் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தின் சூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். 

இதனால் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. கதை திரைக்கதையை முழுமையாக்கி வைத்துக் கொண்டு படப்பிடிப்பில் போய் இயக்குநர் வேலை செய்யலாம் என ஆவலாகக் காத்திருந்த சசிகாந்த், பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டே இருப்பதால் மனம் நொந்திருக்கிறார்” என்கிறார்கள் படக்குழு தரப்பில்.

இராமானுஜம்

விமர்சனம் : டி3!

வேளாண் பட்ஜெட்: “விவசாயிகளுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு”: எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *