நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் லியோ. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று (நவம்பர் 1) சென்னை உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
இந்த வெற்றி விழா நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்ன குமார், நடிகர்கள் அர்ஜுன், மிஷ்கின், த்ரிஷா, மடோனா, கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட லியோ படத்தில் பணியாற்றிய பலரும் கலந்து கொண்டனர்.
லியோ படத்தின் வெற்றி விழா மேடையில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், “நான் கேட்டது யோஹன்: அத்தியாயம் ஒன்று. ஆனால் அவர் எனக்கு கொடுத்தது லியோ” என்று சமூக வலைத்தளங்களில் தனது வைரலான வாக்கியத்தை நடிகர் விஜய்யுடன் பொருத்தி கௌதம் மேனன் பேசியுள்ளது தற்போது வைரலாக பரவ தொடங்கி இருக்கிறது.
மேலும் லியோ படத்தின் வெற்றி விழா மேடையில் பேசிய நடிகை த்ரிஷா, “ஸ்கூல்ல ஒன்னா படிச்ச நண்பரை ரொம்ப நாள் கழிச்சு பார்க்கும்போது எப்படி இருக்குமோ.. அப்படித்தான் லியோ பட செட்டில் விஜய்யை பார்க்கும் போது இருந்தது” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் உதவித்தொகை!
விஜய்யா இருப்பது கஷ்டமா? ஈசியா?: அர்ஜுனின் கேள்வி!