மீண்டும் வில்லன் அவதாரமெடுக்கும் கௌதம் மேனன்

சினிமா

தமிழ் திரையுலகில் 2001ஆம் ஆண்டு மாதவன் கதாநாயகனாக நடித்த ‘மின்னலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது தாய்மொழி மலையாளம்.

தமிழை தாய்மொழியாக கொண்ட இயக்குநர்கள் தாங்கள் இயக்கும் படங்களுக்கு ஆங்கில தலைப்புக்களை வைத்துக்கொண்டிருந்த காலத்தில் இருந்து இன்றுவரை இவர் இயக்கிய அனைத்து தமிழ் படங்களுக்கும்,

‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘வெந்து தணிந்தது காடு’ என்று தூய தமிழ், கவிதை தனமாக தலைப்பு வைத்தவர்.

திரையுலகில் 20 வருடங்களை கடந்து பயணிக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர். இவர், இயக்குநராக மட்டுமில்லாமல், நடிகராகவும் நடித்து வருகிறார்.

director gautham menon again acting role

அவரின் நடிப்பில் படங்கள் அடிக்கடி ரிலீஸ் ஆகிவருகின்றன. சமீபத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்கு பிறகு அவர் மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்று (அக்டோபர் 20) இரண்டு படங்களின் டீசர் வெளியானது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு வரும் ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். இவருடன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இன்னொரு படம் 13. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை விவேக் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த இரண்டு படங்களிலும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக தோன்றுகிறார். வழக்கமாக அவருக்கே உரித்தான ஸ்டைலிஷ் வில்லன் தோற்றத்தில் அவரின் நடிப்பு இரண்டு டீசர்களிலும் கவனம் ஈர்க்க வைக்கிறது.

இராமானுஜம்

போக்குவரத்து விதிமீறல் அரசாணை: நாராயணன் திருப்பதி வரவேற்பு!

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதவி பறிக்கப்பட்டது ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *