இந்திய சினிமாவின் “இசைஞானி” என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கி, சாணி காகிதம், கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க, கனெக்ட் மீடியா நிறுவனம் மற்றும் மெர்குரி மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு இளையராஜா அவர்களே இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2025 ஆம் ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம் என்பதால் இந்த படத்தில் பல திரை பிரபலங்களின் கேமியோ காட்சிகள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Exclusive : #Bharathiraja is confirmed to star in #Ilayaraja BioPic. #Kalvan has now told about this in an interview#Dhanush #ArunMatheswaran #IlayarajaBioPic #Raayanhttps://t.co/LWjNgPerXV
— Movie Tamil (@MovieTamil4) March 26, 2024
இந்நிலையில் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள கள்வன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாரதிராஜாவிடம் இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, “இந்த படம் குறித்த அறிவிப்பு கேட்டதும் இந்த படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரனிடம் பேசினேன். யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு உனக்கு கிடைத்திருக்கிறது. இளையராஜா போன்ற ஒரு லெஜன்ட்டின் கதையை சொல்லும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக சொல்ல வேண்டும் என்று அருணிடம் கூறினேன்.
நானும் இளையராஜாவும் பல மேடை நாடகங்களில் இணைந்து நடித்துள்ளோம், நாடகங்களில் நடிக்கும் போது ஸ்கிரிப்ட்டில் இல்லாத பல வசனங்களை இளையராஜா பேசி என்னை கலாய்ப்பார். நிச்சயமாக இளையராஜா படத்தில் நான் இருப்பேன்” என்று பாரதிராஜா தெரிவித்தார்.
பாரதிராஜாவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இளையராஜா படத்தில் ஏ.ஆர். ரகுமான் கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக சில செய்திகள் வெளியாகி வருகிறது. இளையராஜா படத்தில் எந்தெந்த பிரபலங்களின் கேமியோகள் இடம்பெற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!
அதிமுக கூட்டணிக்கு போகாதது ஏன்?: அன்புமணி விளக்கம்!
மருத்துவமனையிலிருந்து சத்குரு டிஸ்சார்ஜ்!
மகளிருக்கு 50% இடஒதுக்கீடு, இடைத்தேர்தல் ஒழிப்பு : சீமான் வாக்குறுதி!
Comments are closed.