பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
16 வயதினிலே படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.
கிராமத்து கதைகளை கையில் எடுத்து அப்படியே மண்வாசனையை மக்கள் மனதிற்கு கொண்டு சென்ற பாரதிராஜா அண்மைக்காலமாக திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.
தற்போது நடிகர் தனுஷ் நடித்து வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் அவருக்கு தாத்தாவாக நடித்து அசத்தியிருக்கிறார் பாரதிராஜா.
திரைப்படம் வெளியாகி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாரதிராஜாவுக்கு உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் 4 நாளில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்.
கலை.ரா