d.p. gajendran passed away

இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்!

சினிமா

இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் (68) உடல்நலக் குறைவால் இன்று (பிப்ரவரி 5) காலமானார்.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகராகவும் பரவலாக அறியப்பட்டவர் டி.பி. கஜேந்திரன். விசு உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர், எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிளாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். மேலும், கமல்ஹாசனின் பம்மல் கே. சம்பந்தம், பந்தா பரமசிவம், பாட்டு வாத்தியார், வேலாயுதம், வில்லு, பேரழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2000 காலகட்டத்தில் இவர் இயக்கிய படங்கள் மக்களின் மனதைக் கவர்ந்த படங்களாகவே இருந்தன. குறிப்பாக நகைச்சுவை பாணியில் சமூக நலன் கருத்துக்களை கொண்டு இவர் இயக்கிய படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

1982-ல் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் பிஸியாக இருந்து வந்த டி.பி. கஜேந்திரன் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

director and actor d.p. gajendran passed away due to ill health

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் பயின்ற மாணவராகவும், அவரது நண்பராகவும் இருந்த டி.பி. கஜேந்திரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது முதலமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தார்.

இவர் சிறுநீரக பிரச்சனைக்குச் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரைத்துறையில் பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது.

டி.பி. கஜேந்திரனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மோனிஷா

சீனா உளவு பலூன்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

கலைமூச்சை நிறுத்திக் கொண்ட கூத்துப் பறவையின் இறுதி காலம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *