director ameer reply

‘கார்த்தி 25 நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்?’: அமீர் காட்டமான பதில்!

சினிமா

அதர்மம், பகைவன் படங்களை இயக்கிய ரமேஷ் பால கிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் மாயவலை. director ameer reply

சஞ்சனா ஷெட்டி, சரண், தீனா, சத்யா இவர்களுடன் இயக்குநர் அமீர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர்ராஜா இசையமைத்திருக்கும் மாயவலை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று(நவம்பர் 5) சென்னையில் நடைபெற்றது.

டீமுக்கு கிடைத்த வெற்றி!

இந்நிகழ்வில் இயக்குநர் அமீர் பேசுகையில், “ஒரு தயாரிப்பாளராக இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உங்களை சந்திக்கிறேன். இப்படத்தை எடுக்க முதல் காரணம் இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தான்.

இப்போது உள்ள பத்திரிகையாளர்களுக்கு இவரை தெரியாது. அதர்மம், சத்யராஜ் நடித்த பகைவன், விஜய் சாந்தி நடித்த தடயம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். நான் இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டேன்.
எனக்கும் அவருக்குமான உறவு குறித்து யாருக்கும் தெரியாது. எனது அனைத்து படங்களிலும் என்னுடன் இருந்தவர்.

சினிமா அறிவு உள்ளவர்களை ரசிப்பது தான் எனது வேலை. அவருக்கு சினிமா அதிகம் தெரியும். நிறைய நடிகர்களிடம் சென்றோம். ஆனால் யாரும் நடிக்க முன்வரவில்லை அதனால் பின்னர் நானே நடித்தேன்.

எனது நண்பர்கள் என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரிக்க முன்வந்தனர். இப்படத்தை முழுவதுமாக முடித்து விட்டு உங்களை சந்திக்கிறேன். இது எனக்கே புது அனுபவமாக உள்ளது. வெற்றிமாறன் படத்தை பார்த்துவிட்டு தானே வெளியிடுவதாக கூறினார். இது எங்களது டீமுக்கு கிடைத்த வெற்றி.

யுவன் சங்கர் ராஜா எனக்கு உதவியாக இருந்தார். ராம் படத்தில் இருந்து இப்போது வரை எனக்கு உறுதுணையாக இருக்கிறார் யுவன். நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா இந்தப் படத்தில் நடித்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நான் நடிப்பது ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கு பிடிக்காது. இந்த படத்திலும் நடிக்க வேண்டாம் என்றார். பிறகு படத்தை பார்த்துவிட்டு பரவாயில்லை தேறிவிடுவார் என்றார். இது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்” என்று அமீர் பேசினார்.

director ameer reply

அதில் தப்பில்லையே!

தொடர்ந்து அவரிடம், ’மெளனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற அழுத்தமான படங்களை இயக்கிய இயக்குநர் அமீருக்கு வெற்றிமாறன் போன்ற இயக்குநர் தேவைப்படுகின்றாரா?’ என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது

”இங்கு சூப்பர் ஸ்டாருக்கும், தளபதிக்கும் பக்கத்து மாநில ஸ்டார்கள் தேவைப்படுகின்றனர். எனக்கு வெற்றிமாறனோ, வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவதில் தவறு இல்லையே? என்றார்.

director ameer reply

சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது!

’கார்த்தி நடித்துள்ள 25வது படமான ஜப்பான் இசை வெளியீட்டு விழாவிற்கு அவரை பருத்திவீரன் படத்தில் அறிமுகப்படுத்திய நீங்கள் பங்கேற்காதது ஏன்?’ என கேட்ட கேள்விக்கு…

”தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி இருவர் நடித்த படங்களை இயக்கிய ஒரே இயக்குநர் நான்தான். அவர்களிடம் இருந்து நான் ஒதுங்கிவிட்டேன். வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம், விட்டுக் கொடுக்கலாம். ஆனால் சுயமரியாதையுடன் பயணிக்கும் என்னால் அதைவிட்டுக் கொடுக்க முடியாது. அதனால் சினிமாவில் நான் இழந்தது ஏராளம்.

நம்மால் அறிமுகப்படுத்தபட்டவர்கள் அவர்கள் திறமையால் உச்சத்திற்கு செல்லுகிறபோது அதை பார்த்து ரசிப்பவன் நான். ஜப்பான் இசை வெளியீட்டு விழாவுக்கு எனக்கு அழைப்பு இல்லை. அதனால் அந்த விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை” என்று கொஞ்சம் காட்டமாக பதில் அளித்தார்.

நேரில் வந்து சொல்ல சொல்லுங்கள்!

எனினும் விடாத பத்திரிகையாளர்கள், ’அவர்கள் அழைத்ததாக கூறுகிறார்களே?’ என கேட்டதற்கு,

”ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நானும் போகவில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் அழைத்தேன் என்று சொன்னார்கள் என்பதையே உங்கள் மூலமாக தான் கேட்கிறேன். என்னை அழைத்ததாக கூறியவர்களை என்னிடம் நேரில் வந்து சொல்ல சொல்லுங்கள்” என்றார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படைப்புகளாக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யா நடித்த மெளனம் பேசியதே, (இப்படத்தில்தான் திரிஷா அறிமுகமானார்). கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் என இரண்டு படங்களையும் இயக்கியவர் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது. director ameer reply

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

பெண்கள் பாதுகாப்பு… கமலின் லிப்லாக்?: வறுத்தெடுத்த பிக்பாஸ் போட்டியாளரின் மனைவி!

‘D 50’ பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரமெடுக்கும் தனுஷ்

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *