பிரபுவின் மகளை கரம் பிடித்தார் ‘மார்க் ஆண்டனி’ இயக்குநர்!
’த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ’AAA’, ’மார்க் ஆண்டனி’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். கடைசியாக இவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஆதிக் நடிகர் அஜித் 63 படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் திலகம் சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் இன்று (டிசம்பர் 15) இரு குடும்பத்தார் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு ஆதிக் – ஐஸ்வர்யா ஜோடியை வாழ்த்தினார்கள். திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
நான்கு சமூதாயத்தை சேர்ந்த ஐந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… தமிழ் ஆசிரியர் கைது!