ஜெயம் ரவியின் 30 வது படம்! என்ன விசேஷம்?

சினிமா

ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் , அகிலன் ஆகிய படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன. அஹமது இயக்கத்தில் ஜன கன மன என்ற படத்திலும் , அவர் இயக்கும் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பணிகள் இன்று ( ஆகஸ்ட் 5 ) பூஜையுடன் துவங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தும் இயக்குனர்களில் சுந்தர். சி க்கு அடுத்தபடியாக முழு நீள நகைச்சுவை படங்களை இயக்கிவருபவர் எம்.ராஜேஷ்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த சிவா மனசுல சக்தி , பாஸ் என்ற பாஸ்கரன் , ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டது. அதற்கு பிறகு எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் சுமாராகவே இருந்தது. குறிப்பாக , சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் , நடிகர் ஜெயம் ரவியின் 30 வது திரைப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார் எனத் தகவல் வெளியான நிலையில் இன்று ( ஆகஸ்ட் 5 ) அப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. ஸ்கீரின் சீன் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா அருள்மோகன் , நட்டி என்ற நட்ராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நகைச்சுவை கலந்த ரொமான்ஸ் படமாக உருவாகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மீண்டும் சரிதா: எந்த படத்தில் தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *