கசக்கும் சமூகநீதி : ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் இருந்து விலகிய கரு.பழனியப்பன்

சினிமா

ஜீ தமிழ் சேனலில் கடந்த 4 ஆண்டுகளாக தான் தொகுத்து வழங்கி வந்த ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக இயக்குனர் கரு.பழனியப்பன் இன்று (மார்ச் 7) அறிவித்துள்ளார்.

சன் டிவி, விஜய் டிவியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பிரபலமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது ஜீ தமிழ் சேனல்.

இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், அவற்றில் ’தமிழா தமிழா’ விவாத நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் டிவியில் நடத்தப்பட்டு வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு இணையான விவாதத்தை தமிழா தமிழா நிகழ்ச்சியிலும் பார்க்க முடியும்.

கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த 4 ஆண்டுகளாக ஜீ தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சியை நடிகரும் இயக்குனருமான கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கி கொண்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கரு. பழனியப்பன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜீ தமிழ் உடனான நான்கு வருட ”தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது. சமூகநீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. நன்றி ஜீ தமிழ்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுகவுக்கு செல்லும் நிர்வாகிகள்: எடப்பாடிக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

அமர்பிரசாத் ரெட்டி அறியாமையில் பேசுகிறார்: கே.பி.முனுசாமி

+1
0
+1
0
+1
2
+1
11
+1
1
+1
0
+1
2

1 thought on “கசக்கும் சமூகநீதி : ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் இருந்து விலகிய கரு.பழனியப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *