கடந்த செப்டம்பர் 8ந் தேதி தீபிகாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் குழந்தையின் கால்கள் மட்டும் தெரியும் போட்டோவை பதிவிட்டு,குழந்தைக்கு ‘துவா படுகோனே சிங் என’ பெயர் வைத்துள்ளதாக தீபிகா தெரிவித்துள்ளார்.
துவா என்பதற்கு பிரார்த்தனை என்று அர்த்தம். அவளுக்கு இந்த பெயர் வைக்க காரணம் அவள் நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கிறாள். எங்கள் இதயங்கள் அன்பு மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றால் நிரம்பி இருக்கிறாள் என தீபிகா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு தீபிகாவின் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனாலும் , சில விஷமம் பிடித்தவர்கள் குழந்தையின் பெயரை விமர்சித்து வருகின்றனர். துவா என்றால் முஸ்லிம் பெயர். நீங்கள் இருவரும் இந்துக்கள். அப்படியிருக்கையில் எப்படி குழந்தைக்கு முஸ்லிம் பெயர் வைக்கலாம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.பாரம்பரியமான பிரார்த்தனா என்கிற இந்து பெயர் இருக்கையில் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், துவா என்ற பெயரை சூட்டியிருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நீங்கள் இருவரும் இந்துக்கள் என்பதை மறந்து விட்டீர்களா ? என்றும் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், தீபிகா படுகோன் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், குழந்தைக்கு சூட்டிய பெயரை மாற்றப் போவதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. துவா என்றால் உருது மொழியில் பிரார்த்தனையில் ஈடுபடுவது என்பதாகும்.
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடித்த பான் இந்திய திரைப்படமான கல்கி கி.பி 2898 படத்தில் தீபிகா லீட் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் தீபிகா கர்ப்பிணியாகவே நடித்திருந்தார். படம் வெளியாவதற்குள் உண்மையிலேயே தீபிகா தாயாகி விட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“விஜய் அரசியலுக்கு வந்ததில் எந்த பிரயோஜனமும் இல்லை” : ரஜினி சகோதரர் பேட்டி!
யாரும் எதிர்பாராத வீழ்ச்சி… தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!