லியோ ட்ரெய்லரில் பிரியா ஆனந்த்..! நோட் பண்ணுங்கப்பா..!

சினிமா

இயக்குனர் லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில்  வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள படம் லியோ. இந்த படத்தை 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன்,மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல நடிகர்கள் லியோ படத்தில் நடித்துள்ளனர்.

இன்று வெளியான லியோ படத்தின் டிரெய்லரில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடிகர்கள் அனைவருமே இடம்பெற்று இருக்கின்றனர். இந்நிலையில், லியோ படத்தில் பிரியா ஆனந்தும் நடித்துள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், ட்ரெய்லரில் பிரியா ஆனந்தை காணவில்லையே என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்க தொடங்கிவிட்டனர்.

ஆனால் லியோ ட்ரெய்லரில் பிரியா ஆனந்தும் இடம்பெற்று இருக்கிறார்.

லியோ ட்ரெய்லரில் பத்திரிக்கையாளர்கள் விஜய்யை புகைப்படம் எடுக்கும் போது அவர் ஒரு கருப்பு குடையுடன் தன் முகத்தை மறைத்தவாரே பத்திரிக்கையாளர்களை கடந்து செல்வார். அந்த காட்சியை நன்றாக கவனித்து பாருங்கள்… அதில் விஜய் குடையுடன் நடந்து வரும்போது அவருக்கு பின்னால் பிரியா ஆனந்த் நின்று கொண்டிருப்பார்.

இந்த காட்சியின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, பிரியா ஆனந்த் லியோ படத்தில் பத்திரிக்கையாளராக நடித்து இருக்கிறார் என்று சிலர் கூறி வருகின்றனர்.

ஆனால், A History of Violence படத்தின் சாயல் லியோ பட ட்ரெய்லரில் அதிகம் தெரிவதால், அந்த ஆங்கில படத்தில் ஹீரோவின் கடையில் ஒரு பெண் கேரக்டர் வேலை பார்க்கும் அந்த கேரக்டரிடம் இருந்துதான் கதையே தொடங்கும். ஆகையால், லியோ படத்தில் விஜய்யின் கடையில் வேலை பார்க்கும் பெண் கேரக்டரில் பிரியா ஆனந்த் நடித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

லியோ ட்ரெய்லரில் பிரியா ஆனந்தை பார்க்க தவறிருந்தால், இந்த செய்தியை படித்து முடித்தவுடன் டிரெய்லரை பாருங்கள்.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லியோ ட்ரெய்லர் : “A History of Violence” ரீமேக்.. என்ன லோகேஷ் இது?

World Cup 2023: ரச்சின், கான்வே அபாரம், நியூசிலாந்து இமாலய வெற்றி!

+1
1
+1
4
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *