நடிகர் நாகசைதன்யா நடிகை சோபிதா தூலிபாலா திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதரபாத்தில் நடக்கிறது.
நடிகர் நாகசைதன்யா சமந்தாவை பிரிந்த பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சோபிதா தூலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது. ஐரோப்பிய நாடுகளுக்கும் இருவரும் சுற்றுலா சென்று வந்தாகவும் தகவல் வெளியானது.
தொடர்ந்து, கடந்த ஆகஸட் 8 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் பெரியோர்கள் முன்னிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது, நாகசைதன்யாவுக்கு 38 வயதாகிறது. சோபிதாவுக்கு 32 வயதாகிறது.
இந்த நிலையில் இவர்களின் திருமணம் பற்றி வேறு விதமாக செய்தி பரவியது. இவர்களின் திருமண நிகழ்வு உரிமையை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு 50 கோடிக்கு வழங்கியுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த செய்தி வெளியானதும் நடிகை நயன்தாரா நினைவுதான் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
ஆனால், 50 கோடிக்கு விற்றதில் உண்மையில்லை என்று சோபிதாலா தரப்பு மறுத்துள்ளது. முற்றிலும் ஊக அடிப்படையிலான தகவல் என்றும் சோபிதாலா தரப்பில் சொல்கிறார்கள்.
திருமணத்திற்காக சோபிதாவுக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவை, தங்க ஜரிகையால் ஆன ரவிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த திருமணத்தின் சடங்குகள் சுமார் 8 மணி நேரம் நடக்கும் என தெரிகிறது. திருமண அழைப்பிதழை ஒரு கூடையில் துண்டு துணி, ஒரு மரச்சுருள், இனிப்பு, மிட்டாய்கள் வைத்து வழங்கப்பட்டது.
இப்போது, பிரபலங்களின் திருமணங்கள் ஆவணப்படங்கள் போல எடுக்கப்பட்டு நெட்பிளிக்ஸ் போன்ற பிரபல நிறுவனங்களுக்கு விற்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
சமீபத்தில் நடந்த நெப்போலியன் மகன் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பிகைண்ட்வுட்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சமூகநீதியில் முன்னேறும் தெலங்கானா, பின்தங்கும் தமிழ்நாடு… ராமதாஸ் காட்டம்!
நயன்தாராவுக்கு அடுத்த சிக்கல்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!