‘பச்சன்’ குடும்ப பெயரை துறந்தாரா ஐஸ்வர்யா? : துபாயில் நடந்த அந்த சம்பவம்!

சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது, இருவருக்கும் உறவு சரியில்லை. விவாகரத்து செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி வருகிறது. இருவருமே அவ்வப்போது இலைமறை காயாக மறுப்பு தெரிவிப்பது உண்டு.

இதற்கிடையே துபாயில் நடந்த பெண்கள் கருத்தரங்கு  ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சில் பேசுவதற்காக  அவர்  மேடை ஏறிய போது,  ஐஸ்வர்யா என்றே அறிமுகப்படுத்தப்பட்டார். வழக்கமாக , ஐஸ்வர்யா ராய் பச்சன் என்று குறிப்பிடுவது வழக்கம். அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பிறகு , பொது இடங்களில் ஐஸ்வர்யாராய் பச்சன் என்றே அவர் அழைக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பச்சன் என்பது அமிதாப்பின் குடும்ப பெயராகும்.

பச்சன் என்ற குடும்ப பெயரை துறக்க ஐஸ்வர்யா ராய் முடிவெடுத்திருக்கலாம் அல்லது தவறுதலாக பச்சன் என்ற பெயர் விடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடைசியாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் – 2  படத்தில் நடிகை ஐஸ்வர்யா நடித்திருந்தார். அதேவேளையில், அபிஷேக் பச்சன் நடிப்பில் ‘ஐ வாண்டு டு டாக் ‘  என்ற படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் குறித்தும் ஐஸ்வர்யா ராய் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு அமிதாப்பச்சன் குடும்பத்தினருடன் சேர்ந்து வராமல் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக வந்தார். அப்போதிருந்தே, ஐஸ்வர்யா ராய் கணவரை பிரிய போவதாக வதந்திகள் உலா வருகின்றன. தற்போது, ஐஸ்வர்யாவுக்கு 51 வயதாகிறது. அபிஷேக் பச்சனுக்கு 48 வயதாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 எஸ்.பி.பி-யின் ஏஐ குரலை பயன்படுத்த சரண் தடை: காரணம் என்ன?

மருத்துவமனையில் சிகிச்சை… ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை நலம் விசாரித்த ஸ்டாலின்

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *