நடிகர் அபிஷேக் பச்சன் சக நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஐஸ்வர்யா ராய் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அதே காலக்கட்டத்தில் ஜீன்ஸ் என்ற தமிழ்ப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். பிறகு, இந்தி படங்களிலும் நடிக்க தொடங்கினார். அப்போது, நடிகர் சல்மான் கானுடன் ஐஸ்வர்யா காதல் வயப்பட்டிருந்ததாக சொல்லப்பட்டது. அந்த காதலில் பிளவு ஏற்பட்டதால் , நடிகர் சல்மான்கான் மது குடித்து விட்டு மும்பையில் ஐஸ்வர்யா வசித்த பிளாட்டின் கதவை தட்டி கலாட்டா செய்யததாகவும் தகவல் உண்டு. பின்னர், 2007 ஆம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2011 ஆம் ஆண்டு ஆராத்யா என்ற மகளும் பிறந்தார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக்கின் விவாகரத்து பற்றிய ஊகங்களுக்கு மத்தியில், பச்சன் குடும்பத்திற்கு ஐஸ்வர்யா துரதிர்ஷ்டவசமானவர் என்ற பழைய வதந்தி மீண்டும் தற்போது பரவி வருகிறது. அதாவது ஐஸ்வர்யாவுக்கு செவ்வாய் தோஷம் இருந்தது என்றும், அதற்காக முதலில் அவர் ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த வதந்தியை நடிகர் அமிதாப்பச்சன் மறுத்தார்.
இதற்கிடையே , நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் இதனால், ஐஸ்வர்யா கோபமடைந்து தாய் வீட்டுக்கு மகளுடன் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர், அந்த நடிகையுடனான தொடர்பை அபிஷேக் பச்சன் கை விட்ட பின்னரே ஐஸ்வர்யா மீண்டும் பச்சன் வீட்டுக்குள் நுழைந்ததாகவும் சொல்கிறார்கள் . தற்போது, 50 வயதான ஐஸ்வர்யா அதிக எடை போட்டிருக்கிறார். உடல் நல பாதிப்புகளும் அவருக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தொடரும் ரயில் விபத்துகள்: சிஏஜி அறிக்கையில் பகீர்… இனியாவது விழிக்குமா மத்திய அரசு?
60 ஆயிரமாக சுருங்கிய பார்சி மக்கள்… சிங்கிளாக வாழ்வதால் உருவான சிக்கல்!