Dhruva Natchathiram release date announcement video

துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’.

கடந்த ஐந்துஆண்டுகளாக வெளிவராமல் முடங்கிஇருக்கும் இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் தயாரிப்பாளர் தரப்பில் நீண்டகாலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு பிரத்யேக வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இதுவரை இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

இராமானுஜம்

துபாய் ரிட்டர்ன் மகன்… ஆனந்த கண்ணீரில் தாய்: வீடியோ வைரல்!

செவிலியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *