பிப்ரவரியில் ’துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்?
நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராக உள்ள படம் துருவ நட்சத்திரம்.
பல வருடங்களாக வெளியாகாமல் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இயக்குனர் கெளதம் மேனன் முன்பணமாக வாங்கிய 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தர வேண்டும், பணத்தை திருப்பி தரவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதால் துருவ நட்சத்திரம் படம் நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகவில்லை.
அதனை தொடர்ந்து கடந்த மாதம் டிசம்பரில் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் பல முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று ஜனவரி 18 ஆம் தேதி நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் கெளதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், அதனால் இந்த வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைத்தனர்.
கௌதம் மேனன் தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார். இதனால் வரும் பிப்ரவரி மாதம் துருவ நட்சத்திரம் படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்த முறையாவது எந்த பிரச்சனையும் இல்லாமல் துருவ நட்சத்திரம் படம் வெளியாகும் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துணைவேந்தர் ஜெகநாதன் மீதான விசாரணைக்கு தடை! : உயர்நீதிமன்றம்
திடீரென்று உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் டிரெய்லர் சொல்வதென்ன?
மோடி வருகை : சென்னை போக்குவரத்து அதிரடி மாற்றம்!
’பணிநீக்க நடவடிக்கை தொடரும்.. ஆனால்’ : கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை