நானிக்கு குரல் கொடுத்த துருவ் விக்ரம்..!

நடிகர் நானி நடிப்பில் அறிமுக இயக்குனர் சௌரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஹாய் நான்னா”.  இந்த படத்தை வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்  தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். நடிகை ஸ்ருதி ஹாசன் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரபல இசையமைப்பாளர் ஹெஷாம் அப்துல் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

ஹாய் நான்னா படத்தின் ஃபர்ஸ்ட் லுக், Glimpse வீடியோ, பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வரும் டிசம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் இருந்து “Odiyamma” என்ற புது பாடல் நாளை (நவம்பர் 28 ஆம் தேதி) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று Odiyamma பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் நடிகர் நானியுடன் நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்து நடனமாடியுள்ளார்.

மேலும் நடிகை ஸ்ருதி ஹாசனுடனும் நடிகர் துருவ் விக்ரம் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார்கள். Odiyamma பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பாடலின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க போறேன்… திடீரென திருந்திய நிக்சன்?

துருவ நட்சத்திரம் டிசம்பர் 08 ஆம் தேதி ரிலீஸ்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts