இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்கள்.
அந்த வகையில், (லெட்ஸ் கெட் மேரிட் -எல்.ஜி.எம்) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். இது அவர்கள் தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படம்.
இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் காதல் கதையம்சத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகி வருகிறது.
இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமான நடிகை இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் (லெட்ஸ் கெட் மேரிட் -எல்.ஜி.எம் )படத்தின் இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் இன்று(ஜூன் 6) வெளியாகியுள்ளது.
அதன்படி, (லெட்ஸ் கெட் மேரிட் -எல்.ஜி.எம் )திரைப்படத்தின் டீசர் நாளை(ஜூன் 7) மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.
இந்த டீசரை தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து வெளியிடவுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளுநர் நடத்தும் ஆலோசனை!
WTC Final: சாம்பியன் பட்டம் யாருக்கு? ஏபிடி வில்லியர்ஸ் கணிப்பு!