விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி படமான `ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ படத்தை நடித்து இயக்கியிருந்தார்.
கடந்த மாதம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது. இதையடுத்து நடிகர் மாதவன் இயக்குநர் குக்கி குலாட்டி இயக்கத்தில் ‘தோகா: ரவுண்ட் டி கார்னர்’ எனும் இந்தி மொழிப் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் செப்டம்பர் 23ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் டீஸர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மாதவன், தியேட்டர்கள் மூடப்படுவதற்கு படங்கள் நன்றாக இல்லை என்பதாலோ, மக்கள் வருகை குறைவு என்பதாலோ அல்ல.
இங்கு பெரும்பாலான தியேட்டர்களில் சரியான உள்கட்டமைப்பு வசதி இல்லை. இன்னும் பழைய நிலைமையிலேயே உள்ளன.
மக்களின் ரசனை வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. சரியான உள்கட்டமைப்பு வசதியில்லாத காரணத்தால் மக்கள் தியேட்டர்களுக்கு செல்வது குறைந்துள்ளது” என்றார்.
மேலும் இந்தி படங்கள் தோல்வி குறித்துப் பேசியவர், லால் சிங் சத்தா போன்ற நம்பிக்கைக்குரிய படங்களை விட தென்னிந்தியப் படங்கள் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெறுகிறது.
மக்களின் ரசனை மாறிவிட்டது. எனவே நாம் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும்” என்றும் பேசியுள்ளார்
இதுபற்றி மேலும் பேசிய மாதவன், எல்லா படங்களும் கடினமான உழைப்புடனும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் எடுக்கப்படுகின்றன.
வெற்றி பெறாத படத்தை எடுப்போம் என்று நினைத்து யாரும் இங்கு படம் எடுப்பதில்லை.
தென்னிந்தியப் படங்களைப் பொறுத்தவரை, பாகுபலி 1, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா மற்றும் கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும் இந்தி நடிகர்களின் படத்தைவிட நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால் இந்த ஆறு படங்களின் வெற்றியை வைத்து சினிமாவின் பாணி மாறியுள்ளது என்று கூறிவிட முடியாது.
நல்ல படங்களை மக்கள் நிச்சயம் விரும்பி பார்ப்பார்கள். உண்மையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மக்கள் நிறைய உலக சினிமாக்களை பார்த்துப் பழகிவிட்டார்கள்.
அதனால் அவர்களின் விருப்பங்களிலும், ரசனைகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன்.
எனவே மக்கள் பார்க்கும் வகையிலான திரைப்படங்களை, இன்றைக்கு வரும் திரைப்படங்களின் பாணியில் எடுக்க வேண்டும்.
நாம் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இராமானுஜம்
சிறப்புக் கட்டுரை: நம்பிக்கை தரும் நம்பியின் கதை!