நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூன் 30) வெளியாகியுள்ளது.
வரலாற்று பின்னணியை மையமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படத்தை ‘ராக்கி’ ‘சாணிக்காயிதம்’ போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறர்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் டிஜி தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக தனுஷ் மற்றும் நாயகியாக பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், சதீஸ், ஜான் கொக்கன், சுரேஷ் மூர், சிவராஜ் குமார் மற்றும் நிவேதிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
முன்னதாக ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று (ஜூன் 30) இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”மரியாதை என்பது சுதந்திரம்”என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் தன்னுடைய 50 வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மாமன்னன் முதல் நாள் வசூல் எவ்வளவு?
ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்தியா சம்பியன்!