1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 7,000-க்கும் மேற்பட்ட பாடல்கள், 20,000 மேற்பட்ட இசை நிகழ்ச்சிகள் என உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா.
70ஸ், 80ஸ், 90ஸ், 2கே என தலைமுறைகள் கடந்து பலரையும் தன் இசையின் மூலமாக தனது ரசிகர்களாக மாற்றியுள்ளார்.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக போகிறது என்று சில தகவல்கள் சினிமா வட்டாரத்தில் உலாவிக் கொண்டு இருந்தது.
இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் படப்பிடிப்பு 2024 ஆண்டு துவங்க உள்ளதாகவும், இளையராஜா வேடத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை விருப்பாக்ஷா என்ற படத்தை தயாரித்த ’கனெக்ட் மீடியா’ என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“நான் இசைஞானி இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகன்” என்பதை பல மேடைகளில் நடிகர் தனுஷ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
விடுதலை படத்தில் இளையராஜாவின் இசையில் “உன்னோடு நடந்தா” பாடலை பாடிய நடிகர் தனுஷ் தற்போது இளையராஜாவாகவே மாறி நடிக்கப் போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்: காரணம் என்ன?
பிளாஷ்பேக் ’Fake’ தான்: வீடியோவை வெளியிட்டு லியோ படக்குழு பதிலடி!