ரோகிணியில் ’ராயன்’ படம் பார்த்த தனுஷ்… வைப் மோடில் ரசிகர்கள்!

Published On:

| By Selvam

தனுஷ் இயக்கி நடித்து இன்று (ஜூலை 26) வெளியான ‘ராயன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் ‘ராயன்’ திரைப்படத்தை கண்டுள்ளார் நடிகர் தனுஷ். ரசிகர்கள் சூழ அவர் திரையரங்கிற்குள் நுழையும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷின் 50ஆவது திரைப்படமான இந்த ‘ராயன்’ திரைப்படத்தை தனுஷே இயக்கி நடிக்கவுள்ளார் என்கிற அறிவிப்பு கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியானது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது அந்த ட்ரெய்லர். குறிப்பாக ஏ.ஆர்.ரகுமானின் ‘உசுரே நீ தானே’ என்கிற பாடல் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திழுத்தது.

மேலும், சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் தனது போயஸ் கார்டன் இல்லம் குறித்துப் பேசிய பேச்சு பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

இந்த நிலையில், தற்போது இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, சரவணன், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, வரலக்‌ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழகமெங்கும் இந்தத் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் தனுஷ் ரசிகர்கள் பேனர் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தன்னுயிரை கொடுத்து குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர்: வீடுதேடிச் சென்ற அமைச்சர்கள்!

பொதுச்செயலாளர் என எப்படி சொல்ல முடியும்? – எடப்பாடிக்கு நீதிமன்றம் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share