இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகை பிரியங்கா மோகன், கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகர் சந்திப் கிஷன், நடிகை நிவேதா உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், நடிகர் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஆகியோருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, கேப்டன் மில்லர் படத்தில் “கில்லர் கில்லர்” என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார் என்று அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று நவம்பர் 22 ஆம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “கில்லர் கில்லர்” பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.
கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷ் ஒரு போராளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்று இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போது தனுஷ் குரலில் வெளியாகி உள்ள கில்லர் கில்லர் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு அனுமதி மறுப்பு… பின்னணியில் அண்ணாமலை: ஜோதிமணி சந்தேகம்!
ஃப்ளூ காய்ச்சல்… மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்