‘வாத்தி’க்கு மாறாக ‘டிஎஸ்பி’!

சினிமா

தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள வாத்தி படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால், அவர்கள் அறிவித்த நாளில் வாத்தி படம் வெளியாகாது என்று அப்படக்குழுவினரைத் தவிர கோடம்பாக்கத்தில் சொல்ல தொடங்கியுள்ளனர்.

என்ன காரணத்தால் வராது என கேட்டால் அதற்கான காரணத்தை எவராலும் கூற முடியவில்லை.

இந்தப் படத்தில் தனுஷ்க்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி 16 கோடியில் 10 கோடி ரூபாய் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுவிட்டது.

வாத்தி படம் பற்றிய தகவல்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு புரமோஷன் வேலைகளை தனுஷ் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் படம் வராது என்கிற தகவல் பரப்பப்பட்டு வருகிறது

அதனால், அந்தத் தேதியில் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் ஒரு படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்துவருகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் வெளியிட தயார் நிலையில் உள்ளதாம்.

விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இந்தப்படத்துக்கு டிஎஸ்பி என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. படம் தொடங்கியது முதல் படம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை,

அதனால் இன்றிலிருந்து அப்படத்துக்கான விளம்பரங்களைத் தொடங்கவுள்ளதாகத் தயாரிப்பு தரப்பில் சொல்கிறார்கள்.

தனுஷ் படம் வராது என்பதால் இவர்கள் அந்தத் தேதியைக் குறி வைக்கிறார்கள். அதேசமயம் தான் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’ படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறாராம் விஷ்ணு விஷால்.

இதற்கிடையில் விஜய் சேதுபதி நடிப்பில் நீண்ட காலமாக வெளியிடப்படாமல் இருந்து வரும் இடம் பொருள் ஏவல் படத்தை இம்மாத இறுதியில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அம்பலவாணன்

“தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது” – தமிழிசை குற்றச்சாட்டு!

என் பயம் போனதற்கு இது தான் காரணம்”: சிம்பு சொன்ன சீக்ரெட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.