மாஸ்டர் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், செவன் ஸ்கிரீன் உரிமையாளருமான லலித்குமார் தயாரிக்கும் படமொன்றில் தனுஷ் நடிக்கவுள்ளார்.
தனுஷ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிப்பில் ஒரு படத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இவற்றிற்கிடையே இன்னொரு புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அந்தப்புதிய படத்தைத் தயாரிப்பது செவன்ஸ் கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் என்றும் அப்படத்தை இயக்கப்போகிறவர் துணிவு பட இயக்குநர் எச்.வினோத் என்றும் சொல்கிறார்கள்.
எச்.வினோத் இப்போது துணிவு படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறார். அப்பட வேலைகள் முடிவடைந்த பின்பு கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அவர் வரவும், கைவசம் இருக்கிற படங்களை தனுஷ் முடிக்கவும் சரியாக இருக்கும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள்.
இவற்றில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்தால் தனுஷ் -எச்.வினோத் இணையும் படத்தை முன்னதாக தொடங்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு வாரிசு பட வெளியீட்டுக்கு பின் இருக்கும் என கூறப்படுகிறது.
ஏனென்றால் வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கி இருப்பது லலித்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்