தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இதில், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து அண்மையில் ‘மேகம் கருக்காதா’ பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
கடைசியாக 2020 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த எந்த படங்களும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இவர் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் , மாறன் , தி கிரே மேன் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டியில் வெளியாகின. இது தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருப்பது தனுஷ் ரசிகர்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் படத்தில் தனுஷ் மாநகரத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தாத்தாவாக இயக்குனர் பாரதி ராஜா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் மோசமான விமர்சனங்களை பெற்றநிலையில் திருச்சிற்றம்பலம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆண்ட்ரியா நிர்வாணக் காட்சிகள் நீக்கம்: மிஷ்கின்