ரசிகர்களை மிரட்டிய சூர்யா, தனுஷ்

Published On:

| By Jegadeesh

வில்லன் கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் வில்லன் கதாபாத்திரங்களின் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே போகிறது.

விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நடிகர்கள் வில்லனாக நடிக்க தொடங்கிவிட்டனர். இதில் இந்த ஆண்டு மக்கள் மத்தியில் பேசப்பட்ட சிறந்த வில்லன் கதாபாத்திரங்களின் பட்டியல் இதோ..

சூர்யா

சூர்யா (ரோலெக்ஸ்) – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தின் இறுதியில் ஒரு 15 நிமிடங்கள் மட்டுமே இந்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் திரைப்படத்தில் இடம் பெறும். சூர்யா நடித்த இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டாடப்பட்டது.

dhanush surya vijay sethupathy

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி (சந்தனம்) – கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தின் வில்லன். நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக பல படங்கள் நடித்திருந்தாலும் வில்லனாக நடிக்கும் படங்கள் மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. இந்த படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள சந்தனம் கதாபாத்திரத்தின் அழுத்தம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

dhanush surya vijay sethupathy

தனுஷ்

நானே வருவேன் படத்தில் ஹீரோ – வில்லன் என இரு வேடங்களில் நடித்து கலக்கியுள்ளார், தனுஷ். அண்ணன் – தம்பி என இரட்டையர் கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய தனுஷ், பலரின் கவனத்தை கவர்ந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளார். சைக்கோ & திகில் படமாக உருவான இப்படத்தில் இரு வெவ்வேறு கதாபாத்திரத்திலும் நடிகர் தனுஷ் நடித்து கலக்கினார்.

கார்த்திகேய கும்மகொண்டா

இந்த ஆண்டு இயக்குனர் ஹெச். வினோத் இயக்கிய வலிமை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் பிரபலமாகியுள்ளார். நடிகர் அஜித்திற்கு வில்லனாக பைக் ரேஸ் & சண்டை என பல விஷயங்கள் செய்து அசத்தினார். இப்படத்தின் மூலம் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் இவர் பேசப்பட்டுள்ளார். இவர் தெலுங்கு படங்களில் வில்லன் & நாயகன் என இரு பாத்திரத்திலும் நடித்து கலக்கியுள்ளார்.

வினய் ராய்

வினய் ராய் – ஹீரோவாக உன்னாலே உன்னாலே போன்ற பல படங்களில் நடித்து காதல் நாயகனாக கோலிவுட் சினிமாவை வலம் வந்தவர். இந்த ஆண்டு 2022ல் இவர் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தின் அழுத்தம் மற்றும் வில்லத்தனம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

ஆரவ்

ஆரவ் – தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்றவர். சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கிய இவர், வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ‘கலக தலைவன்’ படத்தில் ஆரவ் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து அசத்தினார்.

dhanush surya vijay sethupathy

லால்

லால் – இந்த ஆண்டு இயக்குனர் தமிழ் இயக்கி நேரடியாக ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட திரைப்படம் டாணாக்காரன். இப்படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடித்தார். தமிழக போலீஸ் பயிற்சி முகாமில் நடக்கும் அநீதி மற்றும் அடக்கு முறைக்கு எதிராக இப்படம் உருவாகி பெரிய அளவில் பேசப்பட்டது.

dhanush surya vijay sethupathy

நல்ல விமர்சனங்களில் பிரபலமான இப்படத்தில் வில்லனாக நடிகர் லால் நடித்துள்ளார். அதிகார திமிரில் நடிகர் லால் செய்யும் அடக்குமுறை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு கலை கல்லூரிகளில் பணி!

நவதாராளமயப் பொருளாதாரம்: ஒரு விளக்கப்படம்! – பகுதி 2

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel