தமிழ் சினிமா மட்டுமின்றி அந்த காலத்திலேயே தலைசிறந்த ஓர் பான் இந்திய இசையமைப்பாளராக பல சிறந்த பாடல்களை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. 70ஸ், 80ஸ், 90ஸ், 2கே என இத்தனை தலைமுறைகள் கடந்து இன்றும் இசையின் ராஜாவாக மக்களின் மனதை ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார்.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக போகிறது என்ற தகவல்கள் சினிமா வட்டாரத்தில் சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது.
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் படப்பிடிப்பு 2024 ஆண்டு துவங்க உள்ளதாகவும், இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்பட்டது. இந்த திரைப்படத்தை கனெக்ட் மீடியா என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் கனெக்ட் மீடியா நிறுவனம் இன்று பிரஸ் மீட்டில் இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் என்றும், 2025 ஆம் ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் அறிவித்தனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஷ்மிகா டீப்ஃபேக் வீடியோ: காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
சனாதன தர்மத்தை விமர்சிக்க எனக்கு உரிமை உள்ளது: ஆ.ராசா வாதம்!