நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு இன்று (ஜூலை 4) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராயன் திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
முன்னதாக ஜூன் 13-ஆம் தேதி ராயன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதியை ஜூலை 26-ஆம் தேதிக்கு படக்குழுவினர் தள்ளிவைத்தனர்.
இந்தநிலையில், ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர்ந்து சன் டிவியில் ஆடியோ நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷ் தனது பிறந்தநாளை ஜூலை 28-ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில், அதே வாரத்தில் அவரது படம் வெளியாக இருப்பது தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’ஏ’ டீம் திமுக ஜெயிப்பதற்காக ’பி’ டீம் அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை’: அண்ணாமலை