அடேங்கப்பா… முதல் நாளே இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸில் தூள் கிளப்பிய ‘ராயன்’

Published On:

| By Selvam

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் முதல் நாளில் ரூ.14.5 கோடி வசூல் செய்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2002-ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார் தனுஷ். தொடர்ந்து 23 ஆண்டுகளாக கதாநாயகனாகவும், கெளரவ தோற்றங்களிலும் 49 படங்களில் நடித்த தனுஷின் 50வது படம் ராயன்.

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட தனுஷ் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் கேப்டன் மில்லர் வெளியானது. அதனை தொடர்ந்து நாளை (ஜூலை 28) தனது 41 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள தனுஷுக்கு பிறந்தநாள் பரிசாக நேற்று (ஜூலை 26) ராயன் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் நடிகராவதும், நடிகர் இயக்குநராவதும் தமிழ் சினிமாவில் இயல்பானது என்றாலும் ஒரு நடிகர் தான் நடிக்கும் 50வது படத்தை அவரே இயக்குவது தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை.

தனுஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இரண்டாவது படம் ராயன். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஆதரவு எதிர்ப்பு என சமபலத்தில் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வருகிறது. இருந்த போதிலும் தனுஷ் என்கிற நடிகர் படத்திற்கு உரிய ஓபனிங் வசூல் நேற்றைய தினம் இருந்தது. இன்றும் அதே நிலை தொடர்கிறது என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில்.

போட்டிக்கு படங்கள் எதுவும் இன்றி, பிரம்மாண்டமான விளம்பரங்கள், நட்சத்திர அந்தஸ்து நடிகர்கள், இயக்குநர்கள் கூட்டணியில் உருவான படம் வெளியானாலும் கண்டென்ட் இல்லை என்றால் திரையரங்குக்கு அடுத்த காட்சிக்கே பார்வையாளர் வருகை குறைந்து விடும்.

ராயன் படம் இந்த வருட தொடக்கத்தில் வெளியான கேப்டன் மில்லர் (9 கோடி ரூபாய்) படத்தை காட்டிலும் அதிகமாகவே வசூல் செய்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர். ராயன் படத்தின் முன்பதிவு டிக்கெட் விற்பனை தமிழகத்தில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

இந்நிலையில் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் சேர்த்து, சுமார் 14.5 கோடிரூபாய் வசூல் செய்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

PARIS 2024 OLYMPICS: ஆரம்பமே அதிர்ச்சி… 10மீ ஏர் ரைபில் பிரிவில் வெளியேறிய இந்தியா

சாவர்க்கர் குறித்து பேச்சு… நெட்டிசன்கள் ட்ரோல்… வருத்தம் தெரிவித்த சுதா கொங்காரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel