செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்று அப்டேட் வெளியாகியுள்ளது.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்று வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
செல்வராகவன் இப்படத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் இந்த மாதம் இறுதியில் (செப்டம்பர் 30) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இன்று மாலை நானே வருவேன் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது, படத்தின் அப்டேட்டை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, படத்தின் முதல் பாடல் நாளை மாலை 4.40 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஒரே ஒரு ஊருக்குள்ள இரண்டு ராஜா இருந்தாராம், ஒரு ராஜா நல்லவராம், இன்னொரு ராஜா கெட்டவராம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதையே இதன் மூலம் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும், தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால், நானே வருவேன் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதுமட்டுமல்லாமல் புதுப்பேட்டைத் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பலமடைந்துள்ளது.
மோனிஷா
தனுஷின் ’நானே வருவேன்’ தீபாவளிக்கு ரிலீஸ்!