யுவன் குரலில் “நானே வருவேன்” முதல் சிங்கிள் வெளியானது!

Published On:

| By Monisha

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் திரைப்படத்தின் முதல் பாடல் “வீரா சூரா” வெளியானது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்று வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். செல்வராகவன், ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

https://twitter.com/dhanushkraja/status/1567514890008690689?s=20&t=P8vzRLqB7unwFZK5NNW09Q

காட்டுப்பகுதிக்குள் வாழும் தனுஷின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இந்த பாடல் அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் துள்ளலான இசையில் ’வீரா சூரா தீரா வாடா’ என்று தொடங்கும் இப்பாடலின் இடையில், யுவன் சங்கர் ராஜாவின் குரலில் “காடெல்லாம் உன் அரசாங்கம்” என்ற வரிகள் பாடலுக்குச் சிறப்பு சேர்த்துள்ளது.
இப்பாடலை செல்வராகவன் எழுதியுள்ளார்.

மோனிஷா

தனுஷின் ’நானே வருவேன்’ தீபாவளிக்கு ரிலீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel