நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘வாத்தி’. இந்த படம் தெலுங்கு மொழியில் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இதே நேரத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தை ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கிவருகிறார்.
1930 சுதந்திர காலக் கட்ட கதைக்களத்தில் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பான் இந்திய திரைப்படமாக வெளியாகவிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இத்திரைப்படத்திற்காக தனுஷ் வித்யாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பு நிறுவனமான ”சத்ய ஜோதி” நிறுவனம் தனுஷ் விமான நிலையத்தில் காத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன் “கேப்டன் மில்லர் தோற்றத்தில் எங்கள் ஹீரோவின் அதிகாரபூர்வமற்ற சாதாரணமான புகைப்படம்.. இணையத்தை அதிர வைப்பதற்காக..” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
எடப்பாடி வசம் அதிமுக : ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?
எடப்பாடிக்கு வாழ்த்துகள்…. ஆனால்: திருமாவளவன் திடீர் மெசேஜ்!