தனுஷ் உதவி…நன்றி சொன்ன போண்டா மணி

Published On:

| By Monisha

சிறுநீரகப் பிரச்சனையால் சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் மருத்துவச் செலவிற்காக நடிகர் தனுஷ் 1 லட்சம் வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வரும் போண்டாமணி, சிறுநீரக பிரச்சனை காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போண்டாமணியின் நண்பரும் சக நடிகருமான பெஞ்சமின் அவரது மேல் சிகிச்சைக்கும் பணமின்றி தவிப்பதாகவும் சிகிச்சைக்கு உதவுமாறு கண் கலங்கிப் பேசிய வீடியோவை சமூக வலைத்தளப்பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் நடிகர் போண்டா மணிக்கு உதவி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடிகர் போண்டா மணியை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும் உறவினர்கள் யாராவது சிறுநீரகம் தானம் செய்தால் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் மூலம் அறுவை சிகிச்சை நடக்கும். உங்களுக்கு எந்த செலவும் இருக்காது, செலவை அரசே ஏற்கும் என்று கூறினார்.

dhanush gave 1 lakh for bonda mani

கடந்த சில தினங்களுக்கு முன்னாள் இவரது மருத்துவச் செலவிற்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் கொடுத்து உதவியிருந்தார். இதற்கு போண்டா மணி இந்த 1 லட்சம் 1 கோடிக்குச் சமம் என்று கூறியிருந்தார்.

மேலும் நடிகர் வடிவேலு போண்டா மணியுடன் பேசியபோது தன்னால் இயன்ற உதவியைச் செய்வதாகக் கூறியிருந்தார். நடிகர் வடிவேலு தன்னுடன் பேசியதில் தான் பாதி குணமடைந்து விட்டதாகவும் போண்டா மணி கூறியிருந்தார்.

தற்போது நடிகர் தனுஷும் போண்டா மணியின் மருத்துவச் செலவிற்கு ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். தனுஷ் வழங்கிய நிதி தனக்கு கிடைத்ததாகவும், உதவி செய்ததற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

திரைத்துறையில் இருக்கும் பலரும் நடிகர் போண்டா மணிக்கு தங்களது உதவிகளை செய்து வருகின்றனர்.

மோனிஷா

தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து!

உடுமலை கௌசல்யாவின் புது பிசினஸ்: தொடங்கி வைத்த நடிகை!