நயன்தாராவுக்கு அடுத்த சிக்கல்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kumaresan M

நடிகை நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கில், அவர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தில்  திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். தற்போது, இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகளும் உள்ளன.

இந்த தம்பதியின் திருமண நிகழ்வுடன் சேர்த்து, நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை, ‘Nayanthara: Beyond the Fairytale’ என்ற பெயரில் ஆவணப்படமாக தயாராகி நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் டிரெயிலரில் நானும் ரவுடிதான் படத்தின் 3 விநாடி காட்சிகள் இடம் பெற்றுள்ளது.  படத் தயாரிப்பாளரான தனுஷ் அனுமதி கொடுக்காத நிலையில், நானும் ரவுடிதான் என்ற படத்தின் 3 விநாடி காட்சிகள் நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் நயன்தாராவிடத்தில் 10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து ,தனுஷை கடுமையாக விமர்சித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டார். நயன்தாராவின் அறிக்கையை பார்த்து பலரும் அவருக்கு ஆதரவு அளித்தனர். எனினும், தனுஷ் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

இதற்கிடையே,  நயன்தாராவுக்கு எதிராக தனுஷ்  சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தனுஷின் மனு தொடர்பாக நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

இவருக்கு இப்படி ஒரு விருப்பமா? – புதிய பாதை நடிகரின் புதிய ஆசை!

ஈ.சி.ஆரில் 100 பைக்குகள் பறிமுதல்… சில்வண்டுகளை பொறி வைத்து பிடித்த போலீஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share