நடிகர் தனுஷ் தனது D 50 படத்தை இயக்கி நடித்துள்ளார். சமீபத்தில் D 50 படத்திற்கான படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதை தொடர்ந்து மீண்டும் ஓர் புதிய படத்தை தனுஷ் இயக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்பட்டது.
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் #DD3 (Dhanush Directorial 3) படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்றும் நடிகர் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில் தனுஷ் இயக்கும் DD3 படத்தின் டைட்டில் இன்று (டிசம்பர் 24) வெளியாகி உள்ளது. DD3 படத்திற்கு “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Here's the first look posters of "Nilavukku Enmel Ennadi Kobam" ❤️#Neek #DD3 #Dhanush #GVPrakash@dhanushkraja @gvprakash @theSreyas pic.twitter.com/YYCBJ146jx
— Wunderbar Films (@wunderbarfilms) December 24, 2023
சமீபத்தில் லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த மேத்யூ தாமஸ், பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே வெளியான தகவலின் படி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படம் மாடர்ன் லவ் ஸ்டோரி கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
பிறந்தநாளன்று இளம்பெண் எரித்து கொலை: நடந்தது என்ன?
சென்னை அணியோட நெக்ஸ்ட் கேப்டன் யாரு?… சி.ஈ.ஓ காசி விஸ்வநாதன் ஓபன் டாக்!