வாத்தியை கண்டு கொள்ளாத தனுஷ் : ஏன்?

சினிமா

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியுள்ள நானே வருவேன் படம் இம்மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் என்று செப்டம்பர்20 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதற்குச் சற்று முன்னதாக தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் வாத்தி படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒருபடம் வெளியான பின்பு அடுத்த படம் பற்றி அறிவிக்கப்படும் என்ற வழக்கத்துக்கு மாறாக வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது ஏன்? என்கிற குழப்பம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது.

அதோடு அந்த அறிவிப்பை தனுஷ் கண்டுகொள்ளாதது ஏன்? என்கிற கேள்விகளோடு கோடம்பாக்கத்தை வலம் வந்தபோது வந்து விழுந்த தகவல்கள்.

‘வாத்தி படத்தின் தமிழ்நாடு உரிமை வியாபாரம் இழுவையில் உள்ளது. வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமைக்கு 18 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம். ஆனால் 12 கோடி ரூபாய் விலைக்கு மேல் வாங்கினால் தப்பிக்க முடியாது என தமிழ்நாடு உரிமையை கேட்டவர்கள் தயங்கி நிற்கிறார்கள்.

வாத்தி படத்தின் தமிழக உரிமையைப் பெற முதலில் பிசாசு – 2 தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் முயன்றது. ஆனால் அவர்கள் விதித்த நிபந்தனைகளால் அந்நிறுவனம் வியாபாரத்தை முடிக்காமல் விலகிக் கொண்டது.

அதன்பின் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன், வாங்க விரும்பி விலை கேட்ட போது அவருடன் வியாபாரம் செய்ய விருப்பமில்லாமல் விலையை அதிகமாகக் கூறியிருக்கிறார்கள். அதே நேரம் வருமானவரி துறை சோதனைக்கு அன்புசெழியன் உள்ளானதால் அந்த வியாபார முயற்சி முடியாமலே போனது.

அதன்பின், ஆர்.கே.சுரேஷ் அப்படத்தின் உரிமையைப் பெற முயற்சிக்க உரிய நேரத்தில் பணத்தைச் செலுத்திப் படத்தை ரீலீஸ் செய்ய மாட்டார் என இங்கிருக்கும் மீடியேட்டர்கள் கொளுத்திப்போட அதுவும் நடக்கவில்லை.

இதனால், வெளியீட்டுத் தேதியை அறிவித்தால் வியாபாரம் நடந்துவிடும் என்று நம்பி தேதியை அறிவித்ததாகத் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

திருச்சிற்றம்பலம் வெற்றி, நானே வருவேன் படத்திற்கான எதிர்பார்ப்பில் படத்தை விற்பனை செய்து விட முயல்கின்றார்கள்.

நானே வருவேன் வெளியாகி நன்றாக ஓடினால் இந்தப் படத்தை வாங்க முன்வருவார்கள். இல்லையென்றால் இல்லை என்பதைத் தெலுங்கு தயாரிப்பாளருக்கு இங்கிருப்பவர்கள் புரிய வைக்கவில்லை.

அத்துடன் தமிழ் சினிமாவில் கதாநாயகன் கண் அசைவு இன்றி படம் பற்றிய அறிவிப்புகள் வெளிவராது.

இந்த நிலையில் தனுஷ் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும்” நானே வருவேன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புக்கு முன்னதாக வாத்தி படத்தின் ரீலீஸ் தேதியை தன்னிடம் கேட்காமல் அறிவித்ததை தனுஷ் விரும்பவில்லை.

இதனால் படத்தின் ரீலீஸ் தேதியை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிரவில்லை என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்.

இராமானுஜம்

அஜித்தின் ‘துணிவு’: வைரலாகும் ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக்!

வேலைவாய்ப்பு : கோ -ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணி!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.