D51 shooting begins

தனுஷின் ’D51′ ஷூட்டிங் தொடங்கியது!

சினிமா

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷின் 50வது படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. D50 படத்திற்கு ராயன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை நடிகர் தனுஷ் அவர்களே நடித்து இயக்கியிருக்கிறார்.

D50 படத்திற்கு பிறகு தனுஷின் 51வது படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருக்கிறார். பொலிட்டிக்கல் மாஃபியா கதைக்களத்தில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடா, ஹிந்தி என பேன் இந்தியா படமாக தனுஷின் 51வது படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 18) D51 படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. இந்த பூஜை நிகழ்ச்சியில் தனுஷ், சேகர் கம்முலா மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். D51 படத்தை ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. தற்போது D 51 படத்தின் பூஜை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

படங்கள் நடிப்பதில் பிஸியாக இருக்கும் தனுஷ் இதற்கிடையில் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற ஓர் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படமும் 2024 ஆண்டே வெளியாகும் என்று கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

”விவாகரத்து கடினமானது” கணவரை பிரிகிறாரா சானியா மிர்சா?

“ஏற்கனவே 2 டக் அவுட்”: வைரலாகும் ரோகித் சர்மா வீடியோ!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *