தேடப்படும் குற்றவாளி… கையில் துப்பாக்கியுடன் தனுஷ்: மிரட்டும் கேப்டன் மில்லர் டீசர்!
நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி அவர் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் டீசர் இன்று (ஜுலை 28) வெளியாகியுள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. கதாநாயகியாக பிரியங்கா நடிக்கிறார். பல்வேறு தடங்கல்களுக்கு இடையே படம் உருவாகி வரும் நிலையில், வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷின் 40வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகியுள்ளது.
அதில் முழு தாடியுடன் கையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறார் தனுஷ். அவருடன் பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், சிவா ராஜ்குமார் ஆகியோரின் கதாபாத்திரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆக்சன் காட்சிகள் நிறைந்து காணப்படும் கேப்டன் மில்லர் டீசர் வெளியான 6 மணி நேரத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் கதை 1930 களின் பின்னணியில் நடப்பதாக தயாரிப்பு நிறுவனத்தில் கூறிய நிலையில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடும் குழுவை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது டீசர் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
தனுஷ் கேரியரில் மிகப்பெரிய தயாரிப்பு செலவில் உருவாகி வரும் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
மாநாடு… மாஸ் காட்டத் தயாராகும் உதயநிதி
ஐரோப்பாவில் நிலவும் வெப்ப அலை: உலகில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்!