“தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக உள்ள சில முக்கியப் படங்களில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படமும், தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படமும் உள்ளது.
2024ல் வெளியாக உள்ள ‘கங்குவா’ படத்தின் வீடியோ முன்னோட்டம் ஒன்றை ‘க்ளிம்ப்ஸ்’ என ஜூலை 23 அன்று சூர்யாவின் பிறந்த நாளில் வெளியிட்டனர்.
அதன் தமிழ் வீடியோ 30 மில்லியன் பார்வைகளைக் கடந்து தமிழ் சினிமாவில் அதிகப் பார்வைகளைப் பெற்ற ‘க்ளிம்ப்ஸ்’ என்ற சாதனையைப் படைத்தது. கடந்த எட்டு நாட்களில் அதன் பார்வை 31 மில்லியனைத் தாண்டியுள்ளது. சூர்யாவின் படங்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும் பார்வைகளை விட இது மிக அதிகம்.
இந்நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்த நாளானஜூன் 28நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.
24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற புதிய சாதனையை இது படைத்தது. கடந்தமூன்று நாட்களில் 27 மில்லியன் பார்வைகளைகேப்டன் மில்லர் டீசர் கடந்துள்ளது.’கங்குவா’ பட க்ளிம்ப்ஸ், ‘கேப்டன் மில்லர்’ பட டீசர் இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு சாதனைகளைப் படைத்துள்ளது
தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் வீடியோக்கள் அடுத்த கட்டமாக அதிகப் பார்வைகளைப் பெற ஆரம்பித்துள்ளன.
இராமானுஜம்