நடிகர் தனுஷ் நடித்த தமிழ்ப்படம் ஒன்று பிரிட்டன் தேசிய விருதை வென்றுள்ளது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்த படம் “கேப்டன் மில்லர்”. இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதை வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடப்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது.
மேலும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரூ.90 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
விருதை வென்ற கேப்டன் மில்லர்
இதையடுத்து, “கேப்டன் மில்லர்” திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று வந்தது.
அந்த வகையில், லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரிட்டன் தேசிய விருது விழாவில் 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த அயல் மொழி திரைப்படம் பிரிவில் திரையிட இந்தியாவில் இருந்து “கேப்டன் மில்லர்” “பாக்ஷாக் (Bhakshak)” படமும் தேர்வாகி இருந்தது.
இந்த திரைப்படங்களுடன் மேலும் பிற மொழியில் 12 திரைப்படங்கள் இந்த பிரிவில் இடம்பெற்று இருந்தன.
இந்நிலையில், தேசிய விருது விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படமாக நடிகர் தனுஷ் நடித்த “கேப்டன் மில்லர்” படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை படக்குழுவினர் சார்பாக, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் பெற்றுக்கொண்டார். சர்வதேச அளவில் விருதை வென்ற “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உதயநிதி
நாடு திரும்பிய இந்திய வீரர்கள்: பிரதமர் விருந்து!