தனுஷுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு வாபஸ்!

Published On:

| By Minnambalam Login1

dhanush ban revoked

தனுஷ் நடிக்கும் படத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று (செப்டம்பர் 11) திரும்பப்பெற்றுள்ளது.

கடந்த ஜூலை மாதம் இறுதியில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு திரைத்துறை சம்பந்தமாக சில தீர்மானங்களை நிறைவேற்றினர்.

அதில் “ ஒரு சில நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன்பணம் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களுக்குப் பணி புரியாமல், புதிதாக வரும் திரைப்பட நிறுவனங்களுக்குப் பணி புரியச் சென்று விடுகிறார்கள்.

இதனால் அவர்களுக்கு முன்பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக நடிகர் தனுஷ், பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளைத் துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது சம்பந்தமாகத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு சங்கம், மற்றும் பெப்சி சங்கம் ஆலோசனை நடத்தியது.

இந்த கூட்டத்தின் முடிவில், தனுஷ் நடிக்கும் படங்கள் குறித்து முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், ‘தேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்திற்கு தனுஷ் ஒரு படம் நடித்துக்கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார் மற்றும் ‘ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வாங்கிய முன்பணத்தை வட்டியுடன் திரும்பத் தருவதாக நடிகர் தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

உரங்கள் விற்பனை: கட்டாயப்படுத்தப்படும் விவசாயிகள்… எம்ஆர்கே வார்னிங்!

மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்!

6 வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த தந்தை… அதிர்ச்சியில் உறைந்த மலைகா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment