தனுஷுக்கு போட்டியாக செல்வராகவன்?

சினிமா

இயக்குநர் மோகன் ஜியின் ‘பகாசூரன்’ படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில், ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள ‘பகாசூரன்’ படத்தை இயக்கியுள்ளார்.

படத்தில் ராதாரவி, கே.ராஜன் , கூல் சுரேஷ், சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஃபரூக் பாட்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆன்லைன் செயலிகள் மூலமாக நடக்கும் பாலியல் தொழில் குறித்த கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

இந்நிலையில், படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதே நாளன்று தனுஷின் ‘வாத்தி’ படமும் வெளியாகிறது. தம்பி படத்திற்கு போட்டியாக அண்ணன் படத்தை களம் இறக்குகிறீர்களா என இயக்குநர் மோகன் ஜியிடம் கேட்டபோது, “அப்படியெல்லாம் இல்லை நீண்ட காலமாக சரியான தேதிக்காக காத்திருந்தேன். இந்த தேதியை விட்டால் அப்புறம் எப்போது வெளியிடுவது என்பதை தீர்மானிக்க முடியாது.

வரிசையாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.” என்றவரிடம், வழக்கம்போல பகாசூரன் ஜாதி படமா என கேட்டபோது, “இல்லை, இது மக்கள் பிரச்சினையை பேசும் படம்.” என்றார்.

வாழைப்பழம் தரும் நன்மைகள்!

இந்தியாவின் அதிர்ச்சி தோல்விக்கு காரணமான ஒரு ஓவர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.