10 கோடி பஞ்சாயத்து… அருகருகே இருந்தாலும் முகம் நோக்கா மனம்!

Published On:

| By Kumaresan M

கடந்த 2022-ஆம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா திருமணம் நடந்தது. விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் காதல், திருமணம் தொடர்பான ஆவணப்படம் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற பெயரில் நெட்பிளிக்ஸில் வெளியானது.

இந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இருந்து 3 விநாடி காட்சி இடம் பெற்றிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தனது ஆவணப் படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளைப் பயன்படுத்த தயாரிப்பாளரான  தனுஷ் அனுமதி தரவில்லை. அந்த 3 விநாடி கிளிப்பிங்கை  பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ்  10 கோடி நஷ்டஈடு  கேட்டதாகவும் நயன்தாரா  சாடியிருந்தார். ஆனாலும், தனுஷ் அந்த ஆவணப்படத்தில் இருந்து அந்த காட்சிகளை கண்டிப்பாக நீக்கியே ஆக வேண்டுமென்று கூறி மற்றொரு நோட்டீசை அனுப்பியுள்ளார்.

தற்போது, தனுஷ் ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின்  தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் திருமண நிகழ்ச்சியில் நயன்தாரா, தனுஷ் இருவருமே பங்கேற்றனர். அருகருகே அமர்ந்திருந்தாலும் இருவரும் முகத்தைக் கூட பார்த்துக் கொள்ளவில்லை. நயன்தாரா மற்றும் தனுஷ் உட்கார்ந்துள்ள தோரணையைப் பார்த்த ரசிகர்கள், நிஜமான படையப்பா சீன் போல உள்ளதாக கேலி  செய்துள்ளனர்.

இருவரும் அமர்ந்திருக்கும் புகைப்படம்,  வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.  இந்த திருமண  நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனாலும், நயனும் தனுஷும் அருகருகே அமர்ந்திருந்ததுதான் ஹைலைட்டாக பேசப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

அதிமுக கூட்டத்தில் களேபரம்… வேலுமணி முன்பு மோதிக்கொண்ட நிர்வாகிகள்!

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel