கடந்த வருடம் ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 9 மாதங்களுக்கு பிறகு தங்களது விவாகரத்து முடிவை ரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், நடிகர் தனுஷும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர், இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.
இந்த தம்பதியர் இருவரும் தாங்கள் பிரியப்போவதாக அறிவித்த செய்திகள் சமூகவலைதளங்களில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இருவரும் தனித்தனியாக பிரிந்து அவரவர் பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், கணவன் – மனைவி இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளைப் பேசி தீர்க்கலாம் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளதாகவும் அதனால் இருதரப்பிலும் விவாகரத்து மனுவை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்ற போது இருவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வேதியியலுக்கான நோபல் பரிசு: 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!
ஐபோனில் ரஜினி… உருகிய மகள் ஐஸ்வர்யா
Comments are closed.